மாஞ்சோலை (Manjolai)
மாஞ்சோலை என்பது ஒரு அழகிய வன மலை பகுதி. இது தென்தமிழகத்தின் திருநெல்வேலி என்ற மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு - க்கு அருகில் அமைந்துள்ளது. இது ஐவகை நிலம் அமைத்துள்ள நெல்லை இல் இது குறிஞ்சி நிலம் ஆகும்.
இதனை ஏழைகளின் ஊட்டி என்றே அழைக்கலாம். மிக அருமையான குளிர் பிரதேசம் ஆகும்.
இது திருநெல்வேலி- இல் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதில் கடைசி 20 கி.மீ. மலை பகுதி ஆகும். இது 3500 அடி உயரத்தில் உள்ளது. இதன் மலை வழிப்பாதை மிகவும் குறுகலாக இருக்கும். இதில் செல்வது மிகவும் சாகசமக இருக்கும். பயணிகளுக்கு சாகச உணர்வை கொடுக்க கூடியது. ஆனால் மிகவும் அபாயகரமான வழி ஆகும்.
இதன் கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருக்கும்
இது ஒரு அடர்ந்த மலை பகுதி என்பதால் இங்கு செல்ல இரு சக்கர வாகனங்களை அனுமதிப்பது இல்லை. இங்கு செல்ல அம்பாசமுத்திரம் - இல் அமைந்துள்ள வனத்துறை அதிகாரிகளிடம் நான்கு சக்கர வாகனம் மற்றும் வேன்களில் செல்ல அனுமதி பெற வேண்டும்.
இதன் அருகில் அங்கிருந்த சுமார் 18 கி.மீ. தொலைவில் குதிரைவெட்டி என்ற இடம் அமைந்துள்ளது. இது ஒரு பார்வை இடம் ஆகும். இந்த குதிரைவெட்டி - க்கு செல்லும் வழியில் கோதையாறு மற்றும் ஊத்துமலை உள்ளது. அதிகபட்சம் இங்கு செல்ல அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதை பற்றி இங்கு என்ன உள்ளது என்பதை வேறு பதிவு செய்து வலைதள இணைப்பை தருகிறேன்.
இந்த இடம் தேயிலை பயிரிட தகுந்த இடம் என்பதால் இங்கு இயற்கை தேயிலை பயிர் செய்யப்படுகிறது.
Comments
Post a Comment